லாரி ஸ்டிரைக்: கோவையில் அத்துமீறி சரக்கு ஏற்றிய கர்நாடக லாரியை சிறை பிடித்ததால் பரபரப்பு

கோவை: நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்தம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் கோவை உக்கடம் பகுதியில் சரக்கு ஏற்றிக்கொண்டு இருந்த கர்நாடக லாரியை கோவை லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சிறை பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்தம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் கோவை உக்கடம் பகுதியில் சரக்கு ஏற்றிக்கொண்டு இருந்த கர்நாடக லாரியை கோவை லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சிறை பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று நான்காவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 4.5 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன.

இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. கோவையைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு சுமார் 20 கோடி ரூபாய் என நான்கு நாட்களில் சுமார் 80 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அத்தியாவசியமான பொருட்களான மருந்து, பால், காய்கறிகள் போன்றவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், கோவையிலிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய லாரிகள் உக்கடம் பகுதியில் உள்ள லாரி பேட்டை மற்றும் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், உக்கடம் பகுதியில் கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரி ஒன்று சரக்கு ஏற்றிக்கொண்டு இருப்பதாக கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் அங்கு விரைந்த கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.

மேலும், லாரியின் ஓட்டுநரை அழைத்து லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் லாரிகளை இயக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினர். தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள அந்த லாரியின் உரிமையாளரை தொடர்பு கொண்ட கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், போராட்டம் முடிவுக்கு வந்ததற்குப் பிறகு சிறைபிடிக்கப்பட்ட லாரி அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தனர்.



ஏற்கனவே கேரளாவில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த லாரி கிளீனர், சில நபர்களால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். அதேபோல அந்த வண்டியின் லாரி ஓட்டுநரும் ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் கோவையில் இருந்து லாரிகள் கிளம்புவதற்கு லாரி ஓட்டுநர்கள் கெடுபிடி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...