முடங்கிக்கிடக்கும் லாரிகள்: தொழில் நகரமான திருப்பூரில் ரூ.400 கோடி வரை வர்த்தக பாதிப்பு

திருப்பூர்: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நான்காவது நாளாக தொடர்வதால் திருப்பூரில் ரூ.400 கோடி வரை வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நான்காவது நாளாக தொடர்வதால் திருப்பூரில் ரூ.400 கோடி வரை வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோலுக்கான விலையைக் குறைக்க வேண்டும், நாள்பட்ட சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சங்கம் மற்றும் உறுப்பினர் சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20–ம் தேதி தொடங்கிய இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ஏராளமான லாரிகள் இயங்கவில்லை. திருப்பூர் மாவட்டத்திலும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. லாரிகள் இயக்கப்படாததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு

இந்த போராட்டம் காரணமாக திருப்பூரில் பின்னலாடை தொழில் துறையினர் கடும் இழப்பைச் சந்தித்து வருகிறார்கள். திருப்பூரில் இருந்து சரக்குகளை வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அனுப்ப முடியாமல் தொழில் துறையினர் திணறி வருகிறார்கள்.



இதன் காரணமாக பின்னலாடை சரக்குகள் அனைத்தும் அந்தந்த நிறுவனங்களிலேயே தேக்கமடைந்து உள்ளன. இதனால் ரூ.400 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.

காய்கறிகள்

திருப்பூர் உழவர் சந்தைக்கு உடுமலை, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக விவசாயிகள், வியாபாரிகள் காய்கறி மூடைகள் மற்றும் சரக்குகளை அரசு பேருந்துகளில் ஏற்றி விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.



சிறிய ரக சரக்கு வாகனங்களில் காய்கறிகளை ஏற்றிச் செல்வதாகவும், ஒரு லாரியில் ஏற்றிச் செல்லும் சரக்குகளை தற்போது இரண்டு சிறிய ரக சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாடகை அதிகமாக தரவேண்டிய சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.



இதுபோல் காங்கேயத்தில் இருந்து வட மாநிலங்களுக்குத் தேங்காய் எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் மற்றும் கொப்பரை ஏற்றிச்செல்லும் லாரிகள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தேங்காய் லாரிகளும் வரவில்லை. அரிசி ஆலைகள் நிறைந்த இந்த பகுதிக்கு ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளும் வரவில்லை.



லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக காங்கேயம் பகுதியில் தேங்காய் எண்ணெய் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய், கொப்பரை ஆகியவை பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படாமல் தேக்கமடைந்துள்ளது. இதுபோல் மற்ற பகுதிகளில் இருந்து வர வேண்டிய லாரிகளும் வராததால் களங்களில் தேங்காய் உடைப்பு பணி நடைபெறவில்லை.

இந்த போராட்டம் காரணமாக காங்கேயம் தாலுகா பகுதியில் மட்டும் தினசரி சுமார் ரூ.5 கோடிக்கு தேங்காய் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்களும் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மத்திய, மாநில அரசுகள் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...