நீர்வரத்து அதிகரிப்பால் ஆழியாறு அணை இன்று இரவுக்குள் நிரம்பும் அபாயம்

கோவை: தொடர் கனமழையின் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணை 116 அடியை எட்டியுள்ளதால், இன்று இரவுக்குள் அதன் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை: தொடர் கனமழையின் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணை 116 அடியை எட்டியுள்ளதால், இன்று இரவுக்குள் அதன் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. ஏற்கனவே, சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பரம்பிக்குளம் அணையும் நிரம்ப உள்ளது. 

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை 116.5 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு விநாடிக்கு 1,121 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிட உள்ளதால், கோட்டூர் ஆனைமலை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே, ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 15-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...