மேட்டுப்பாளையத்தில் நீரில் மூழ்கிய வாழைத்தோட்டம்: பரிசலில் சென்று வாழைத்தார்களை வெட்டும் விவசாயிகள்

மேட்டுப்பாளையம்: எதிர்பார்ப்பையும் மீறி பெய்த பருவமழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் வாழைத் தோட்டங்கள் நீரில் மூழ்கியதால், பரிசலில் சென்று வாழைத்தார்களை வெட்டியெடுக்கும் பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம்: எதிர்பார்ப்பையும் மீறி பெய்த பருவமழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் வாழைத் தோட்டங்கள் நீரில் மூழ்கியதால், பரிசலில் சென்று வாழைத்தார்களை வெட்டியெடுக்கும் பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் தொடரும் கனமழை மற்றும் பில்லூர் அணை நிரம்பியதால் அதன் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானியாற்றில் கடந்த இருவார காலத்திற்கும் மேலாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைக்காட்டில் இருந்து கீழ் நோக்கி கரைபுரண்டோடி வரும் பவானியாறு, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி வழியே பவானிசாகர் அணையை சென்றடைகிறது. இதனால், 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையும் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.

நீர்வரத்து காரணமாக வெகுவேகமாக உயரும் நீர்மட்டத்தால் அணையின் பின்புறமுள்ள இதன் நீர்தேக்க பகுதியெங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. இதனால், அணையின் நீர்தேக்கப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பல லட்சம் வாழை மரங்களும் நீரில் மூழ்கியுள்ளன. பொதுப்பணித்துறையினர் அனுமதியோடு இப்பகுதியினை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராகியிருந்த 7,000 ஏக்கர் பரப்பளவு வாழைமரங்கள் அனைத்தும் நீருக்கடியில் சென்றுவிட்டன. எதிர்பார்ப்பையும் மீறி பருவமழை கொட்டி தீர்த்த காரணத்தினால், கடும் இழப்பை எதிர்கொள்ள இயலாமல் கலங்கி நிற்கின்றனர் இப்பகுதி வாழை விவசாயிகள். 



பல லட்சம் வாழைமரங்கள் அடியோடு நீரில் முழுவதுமாக மூழ்கி கண்களுக்கே தெரியாத நிலையில், சற்றே மேடான பகுதியில் சில ஆயிரம் வாழை மரங்களின் மேல்பகுதி மட்டும் நீருக்கு வெளியே தெரிகின்றன. இதில், காய்த்து நிற்கும் வாழைத்தார்களை வெட்டி எடுத்தாவது தங்களது இழப்பை ஓரளவேனும் சமாளிக்க இயலுமா என்ற முயற்சியில் தற்போது விவசாயிகள் இறங்கியுள்ளனர். நீரில் மூழ்கிக் கிடக்கும் வாழைத்தோட்டங்களுக்குள் பரிசல் மூலம் சென்று கிடைக்கும் வாழைத்தார்களை வெட்டும் ஆபத்தான முயற்சியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். 



ஒப்பந்த அடிப்படையில் இப்பகுதியில் வாழை விவசாயம் செய்துள்ளதால், தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு எந்த இழப்பீடும் கிடைக்காது. இதன் காரணமாகவே, மூழ்கி கிடக்கும் வாழை மரங்களுக்கிடையே மிகுந்த சிரமத்தோடு பரிசலில் பயணிக்கும் பரிதாப நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில நூறு வாழைத்தார்களாவது இதன்மூலம் கிடைத்தால், இந்த விவசாயத்தை மேற்கொள்ளப் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்தவாவது உதவுமே என இம்முயற்சியில் இறங்கியுள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர் விவசாயிகள். திடீர் வெள்ளப்பெருக்கால் கடுமையாகப் பாதித்துள்ள இப்பகுதி வாழை விவசாயிகளுக்கு உதவிட தமிழக அரசு முன்வரவேண்டும் என்பதே இவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...