கோவை மாநகராட்சியில் ரூ.6.27 கோடியில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

கோவை: கோவை நகராட்சியில் ரூ. 6.27 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்ராஜீ இணைந்து தொடங்கி வைத்தனர்.

கோவை: கோவை நகராட்சியில் ரூ. 6.27 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்ராஜீ இணைந்து தொடங்கி வைத்தனர். 



கோவை மாநகராட்சி, திறன்மிகு நகரம் திட்டத்தின் கீழ் வார்டு எண்.86, பள்ளி வீதி, பள்ளிவாசல் அருகில், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் பள்ளி வீதி, ஆசாத் நகர், எம்.சி.ஆர்.நகர், சேரன் நகர், அண்ணா காலனி ஆகிய பகுதிகளுக்கு மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 4.24 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். 



பின்னர், வார்டு எண்.57 இராஜலட்சுமி நகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 48 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவையும், வார்டு எண். 66, உடையாம்பாளையத்திலுள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கலையரங்க கூடத்தையும் மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.செல்லூர்ராஜீ ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். 



மேலும், வார்டு எண்.66-ல் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் தாய்சேய் நல மருத்துவமனை கூடுதல் கட்டிடங்களைத் திறந்து வைத்து, சிறப்புத் திட்டத்தின்படி இரண்டு குழந்தைகளுக்கு அம்மா பரிசுப் பெட்டகங்களை அமைச்சர்கள் வழங்கினர். இதைத் தொடர்ந்து, சி.என்.எ.தேவர் லே-அவுட் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 15 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவையும், பி.ஆர் லே-அவுட் பகுதியில் ரூ. 35 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்த வைத்தனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...