கேரளாவில் கோவையைச் சேர்ந்த லாரி கிளீனர் கல்லால் அடித்துக் கொலை : வேலைநிறுத்தத்தை மீறி காய்கறி ஏற்றிச் சென்றதால் வெறிச்செயல்

வேலைநிறுத்தப் போராட்டத்தையும் மீறி கோவையில் இருந்து கேரளாவிற்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரியின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அதன் க்ளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.


வேலைநிறுத்தப் போராட்டத்தையும் மீறி கோவையில் இருந்து கேரளாவிற்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரியின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அதன் க்ளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.



சுங்கவரிக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக விளைவித்த பொருட்களை பிற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ. 15,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கோவையில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு வேலைநிறுத்தத்தையும் மீறி, ஓட்டுநர் நூருல்லா லாரியில் காய்கறிகளை ஏற்றிச் சென்றார். லாரி கேரள மாநிலத்திற்குள் நுழைந்து கஞ்சிக்கோடு பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தையும் பொருட்படுத்தாமல் லாரியை இயக்கியதால், 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சிலர் அந்த வாகனத்தின் மீது கற்களை எரிந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது.

இதில், லாரியின் க்ளீனர் பாட்ஷா பலத்த காயமடைந்தார். இதைத்தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டுனர் நூருல்லா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஒரு சில கோரிக்கைகளுக்காக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டக் காரணத்தினால், கோவையைச் சேர்ந்த லாரியின் க்ளீனர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...