மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம்: விமர்சையாக நடைபெற்ற கொடியேற்று விழா

கோவை: மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா கிராம மக்கள் சார்பாக இன்று விமர்சையாக நடைபெற்றது.

கோவை: மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா கிராம மக்கள் சார்பாக இன்று விமர்சையாக நடைபெற்றது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடியேற்றம் இன்று மதியம் வெகு விமர்சையாக நடைபெற்றது.



கடந்த 17-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஆடிக்குண்டம் திருவிழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகப் பூஜைகள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து இன்று தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

பவானி ஆற்றில் கிராம மக்கள் புனித நீராடி, வனத்தில் இருந்து மூங்கில் மரத்திலான கொடி மரத்தையும் சிங்க முகம் பதித்த கொடியையும் மேள தாளம் முழங்க ஆடிப் பாடி எடுத்து வந்தனர்.

பின்னர் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள முத்தமிழ் விநாயகர் சன்னதியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடி மரம், சிங்க முக கொடியுடன் கோவில் வளாகத்தில் முன்புள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...