நீலகிரியில் மரம் விழுத்து உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு நிதி உதவி

நீலகிரி: பிங்கர் போஸ்ட் பகுதியில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் வழங்கினர்.

நீலகிரி: பிங்கர் போஸ்ட் பகுதியில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் வழங்கினர்.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, பருவமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பலத்த காற்றுடன், மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த இமாம் அகஸ்டியன் என்ற கல்லூரி மாணவன், கடந்த, 15-ம் தேதி குடும்பத்தினருடன் நடந்து சென்றபோது, சாலையோர கற்பூர மரம் விழுந்தது. இதில், இமாம் அகஸ்டியன் பலத்த காயமடைந்தார். 

தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு, மாநில அரசு சார்பில், பேரிடர் நிவாரண நிதி, ரூ.4 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் வழங்கினர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...