கோவையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

கோவை: கோவையில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.



குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் கோவையில் இன்று நடைபெற்றுது. கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில், முன்னாள் கிரிகெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமன் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர்.



10, 5, 3 மற்றும் 1 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளாக இந்த மாரத்தான் நடைபெற்றது. காவலர் பயிற்சி மைதானத்தில் இருந்து தொடங்கப்படும் இப்போட்டி, பாலசுந்தரம் சாலை வழியாக, அவினாசி சாலையை கடந்து, பந்தய சாலையை சுற்றி, நேரு ஸ்டேடியம் வழியாக மீண்டு மைதானத்தை வந்தடைகின்றனர்.

ஆண், பெண் என இரு பாலருக்குமாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் மூன்று பரிசுகள் வீதம் மொத்தம் 24 பேருக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.



குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்தும், 1098 என்ற சைல்டு லைன் எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...