இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை

சேலம்: நீர் வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியில், தற்போது 117 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இன்று இரவுக்குள் அணை நிரம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்: நீர் வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியில், தற்போது 117 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இன்று இரவுக்குள் அணை நிரம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 14-ந் தேதி முதல் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வரத்தொடங்கி படிப்படியாக அதிகரித்தது.

இதன் காரணமாக, தற்போது அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியதால் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. 16 கண் பாலம் பகுதி முழுமையாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் மேட்டூரில் குவிந்து வருகின்றனர். 

தமிழகத்தின் மிகப்பெரிய அணையாக திகழும் மேட்டூர் அணை 1,700 மீட்டர் நீளமுடையது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...