கோவையில் தொடரும் உணவுப் பாதுகாப்புத் துறையினரின் சோதனை : மேலும் 52 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை : சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், 52 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காலாவதியான 1,850 லிட்டர் தண்ணீர் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை : சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், 52 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காலாவதியான 1,850 லிட்டர் தண்ணீர் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்த வருகின்றனவா..? என்பது குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், கோவை புறநகர் பகுதியான சூலூர் பகுதியில் இன்று 10-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், ஆசாபுரி என்ற கடையில் இருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள பான்மசாலா குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல, நாகம்மாள் ஏஜென்சியில் இருந்து 47 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், காலாவதியான 1,850 லிட்டர் தண்ணீர் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...