வழக்கம் போல தாமதமாக வந்த அமைச்சர் : முதல்முறையாக குறித்த நேரத்தில் தொடங்காத சி.ஆர்.பி.எப்., நிகழ்ச்சி

கோவை: வழக்கம் போல அமைச்சரின் தாமதமான வருகையின் காரணமாக, சி.ஆர்.பி.எப்., நிகழ்ச்சி முதல்முறையாக குறித்த நேரத்தில் தொடங்காதது, வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


கோவை: வழக்கம் போல அமைச்சரின் தாமதமான வருகையின் காரணமாக, சி.ஆர்.பி.எப்., நிகழ்ச்சி முதல்முறையாக குறித்த நேரத்தில் தொடங்காதது, வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.



கோவை குருடம்பாளையம் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப்., வளாகத்தில் மத்திய பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. காலை 11.30 மணியளவில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக காலை 11 மணிக்கே பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர். 



வழக்கமாகக் குறிப்பிட்ட நேரத்தில் தாமதமின்றி சி.ஆர்.பி.எப்.நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிலையில், அமைச்சரின் வருகை தாமதமானதால் நிகழ்ச்சியைத் துவக்க தாமதம் ஏற்பட்டது. இதோ வந்துவிடுவார்..! இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சிகள் துவங்கும் என பலமுறை அறிவிப்பு செய்யப்பட்டாலும் அமைச்சர் வந்த பாடில்லை.

தூங்கி வழிந்த வீரர்கள் : 



ஒரு கட்டத்தில் பொறுத்து பொறுத்துப் பார்த்த சி.ஆர்.பி.எப்.,வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டையும் மீறி தூங்கி வழிய ஆரம்பித்தனர். சரியான நேரத்தில் உணவு அருந்திப் பழகிய வீரர்கள் பசியோடு அமைச்சரின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஒரு வழியாக இரண்டே கால் மணியளிவில் அமைச்சர் அங்கு வந்து சேர்ந்தார். 



இதனையடுத்து, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டால், அங்கு சிக்கி உள்ளவர்களை மீட்பது குறித்து தத்துரூபமாக செயல் விளக்கம் செய்து காட்டினர். பின்னர், அங்கு உள்ள செயல்பாடுகள் குறித்து அமைச்சர் பார்வையிட்டார். கடைசியாக ஒரு வழியாக நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சி.ஆர்.பி.எப்.வீரர்கள் கலைந்து சென்றனர்.


Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...