பசுந்தேயிலைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்

நீலகிரி : பசுந்தேயிலைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யக்கோரி உதகையில் இன்று நடைபெற்ற அரசியல் கட்சி மற்றும் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீலகிரி : பசுந்தேயிலைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யக்கோரி உதகையில் இன்று நடைபெற்ற அரசியல் கட்சி மற்றும் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரமாக திகழ்ந்து வருவது தேயிலை விவசாயம். இதில், சுமார் 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காரணங்களால் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ. 30 வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 



மேலும், பல விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தங்களது தேயிலை தோட்டங்களை செல்வந்தர்களுக்கு விற்று சமவெளி பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் இன்று உதகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தேயிலை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ. 30 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இது தொடர்பாக விலை நிர்ணய குழு தலைவரான மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிப்பது, மத்திய, மாநில அரசுகளுக்கு நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் கோரிக்கை எடுத்து செல்வது மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...