லாரிகளின் 2-வது நாள் வேலைநிறுத்தத்தால் நீலகிரியில் தேங்கிக் கிடக்கும் காய்கறிகள்: விவசாயிகள் வேதனை

நீலகிரி: நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நீலகிரியில் பல லட்சம் மதிப்பிலான கேரட், பீட்ருட் உள்ளிட்ட காய்கறிகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நீலகிரி: நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நீலகிரியில் பல லட்சம் மதிப்பிலான கேரட், பீட்ருட் உள்ளிட்ட காய்கறிகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலை தோட்ட காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீன்ஸ், பட்டாணி, அவரை, நூல்கோல், சைனிஸ் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. இந்தக் காய்கறிகளை உதகை மார்க்கெட், மேட்டுப்பாளையம் சந்தை, திருப்பூர், சென்னை, ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதேபோல், வெளி மாநிலங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி, வெங்காயம், மல்லி, கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரை போன்ற காய்கறிகளும் நீலகிரி மாவட்டத்திற்கு எடுத்து வரப்படுகிறது.



இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கவரிக் கட்டணம் உள்ளிட்டவற்றை குறைக்க வலியுறுத்தி 2-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், உதகையில் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு அண்டை மாவட்டங்கள் அல்லது மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேக்கமடைந்துள்ள காய்கறிகளின் மதிப்பு பல லட்சம் என்பதால் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து இல்லாததால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தக்காளி 26 ரூபாயாகவும், பெரிய வெங்காயம் 32 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...