மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி பனியன் தொழிலாளி பலி

திருப்பூர்: திருப்பூரில் குளிப்பதற்காக தண்ணீர் மோட்டாரை இயக்கிய போது, மின்சாரம் தாக்கி பனியன் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூரில் குளிப்பதற்காக தண்ணீர் மோட்டாரை இயக்கிய போது, மின்சாரம் தாக்கி பனியன் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிழக்கு காளிபாளையம் கிராம் அம்பாள் நகரில் கனகு என்பவருடைய வீட்டில் பனியன் தொழிலாளி வடிவேல் (35) வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல குளிப்பதற்காக தண்ணீர் மோட்டாரை இயக்கிய போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருமாநல்லுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



உயிரிழந்த பனியன் தொழிலாளி வடிவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த வடிவேலுக்கு சுகன்யா என்ற மனைவியும், நவநீதன் (5) என்ற மகனும் உள்ளனர். வடிவேலு உயிரிழந்தது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டில் உள்ள தண்ணீர் மோட்டாருக்கு செல்லும் மின்சார வயருக்கு டேப் சுற்றாமல், கம்பி வெளியே இருந்ததால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...