ஆடி வெள்ளியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் தமிழில் லட்சார்ச்சனை

கோவை: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் தமிழ் முறை லட்சார்ச்சனையை பிள்ளையார் பீடம் பொண்மணிவாசக அடிகளார் தொடங்கி வைத்தார்.

கோவை: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் தமிழ் முறை லட்சார்ச்சனையை பிள்ளையார் பீடம் பொண்மணிவாசக அடிகளார் தொடங்கி வைத்தார்.

மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா மற்றும் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு இன்று அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் கோவில் மண்டபத்தில் அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் காட்சி அளித்தார்.

தொடர்ந்து கோவை அனந்த நாராயணன் ஸ்ரீதேவி குடும்பத்தினர் சார்பில் ஏக தின தமிழ் முறைப்படி லட்சார்ச்சனை நடந்தது. பிள்ளையார் பீடம் பொன்மணி வாசக அடிகளார் சிறப்பு பூஜை செய்து லட்சார்ச்சனை தொடங்கி வைத்தார். 

இதனையடுத்து பெண் பக்தர்கள் பவானி ஆற்றில் புனித நீராடி கோவில் வளாகத்தில் அம்மனின் வாகனமான சிங்க வாகனத்திற்கு முன்பாக எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்கி வழிபாடு நடத்தினர். பின்னர் நடைபெற்ற சிவனடியார்கள் தமிழ் மொழியில் நூறாயிரம் பரவுதல் அர்ச்சனை நிகழ்ச்சியில் அர்ச்சனைக்குத் தகுந்தவாறு மலர்களைக் காணிக்கையாக்கி வழிபாடு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...