கனமழை காரணமாக துண்டிக்கப்பட்ட சாலை: கோவையில் தத்தளிக்கிறது ஒரு கிராமம்

கோவை: இருட்டுப்பள்ளத்தை அடுத்து அமைந்துள்ளது முட்டத்து வயல் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.


கோவை: இருட்டுப்பள்ளத்தை அடுத்து அமைந்துள்ளது முட்டத்து வயல் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு 100-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் உள்ளன. இங்கிருந்து இருட்டுப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு விரைவாகச் செல்ல ஒரு மண் சாலை மட்டுமே உள்ளது. இந்த சாலையை விட்டால் ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றியே மற்ற ஊர்களுக்கு செல்ல முடியும்.



அந்த மண் சாலை, உக்குளம் குளக்கரை அருகே அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடரும் கனமழையால் உக்குளம் குளமானது நிரம்பி வழியத்தொடங்கியது. இதனால், தற்போது குளத்தில் இருந்து நீர் வெளியேறி வருகிறது.

சாலை இல்லை

அவ்வாறு வெளியேறும் நீர், அந்த மண் சாலையினை முழுவதுமாக விழுங்கிக்கொண்டது. இதனால் அந்த வழியை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அக்கிராம மக்கள், கடந்த ஆறு நாட்களாக இந்த நிலை நீடிப்பதாகவும், சேறும் சகதியுமான அந்த சாலைக்குள் நடக்கவே முடியாது என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.



வெளி கிராமத்தில் இருந்து பால் கறக்க வரும் ஆட்கள் அந்த கிராமத்திற்குள் நுழைய முடியாத காரணத்தால், கறவை மாடுகளை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று சாலையில் நிறுத்தி பால்கறக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கூறுகையில், "இந்த பருவமழை தொடங்கியது முதலே எங்களுக்கு பிரச்சனைகளும் தொடங்கிவிட்டது. இந்த கிராமத்திற்கு தார் சாலை வசதி செய்து தரக்கோரிய எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது. சேறும் சகதியுமான சாலைகளால் நாங்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். தற்போது அந்த மண் சாலையும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.



இளைஞர்கள் இதனை எளிதில் கடந்து சல்ல முடியும். ஆனால், பள்ளி குழந்தைகளும், முதியவர்களும் இந்த சாலையை கடந்து வெளியே செல்வது முடியாத காரியம்." என்றார்.

மழை குறைந்துள்ள இந்த நேரத்தில் முட்டத்து வயல் கிராமத்தில் சாலை அமைத்து அந்த கிராமம் தனித் தீவாக மாறிவிடாமல் தடுக்குமா மாவட்ட நிர்வாகம்? என்பது அந்த கிராம மக்களின் கேள்வியாக ஒலிக்கிறது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...