மேட்டுப்பாளையம் அருகே கல் குழிக்குள் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் : சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கல் குழிக்குள் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கல் குழிக்குள் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் வட்டம், கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்டது வட்டப்பாறை கிராமம். கட்டாஞ்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இயங்கி வந்த கல் குவாரிகளால் ஆங்காங்கே பயன்பாட்டில் இல்லாத கல் குழிகள் காணப்படுகின்றன.

வெடி வைத்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட இந்த ஆழமான கல் குழிகள் தற்போது குப்பைகள் கொட்டும் குப்பைக்குழிகளாக மாற்றப்பட்டு விட்டன. கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பை கழிவுகளும் தற்போது வட்டப்பாறை கிராமத்தில் உள்ள கல் குழியில் கொட்டப்பட்டு வருகின்றன.

சாலையோரத்தில் உள்ள இக்கல் குழிக்குள் பேரூராட்சி நிர்வாகமே தினசரி லாரிகளில் கழிவுகளை கொண்டு வந்து இங்கு கொட்டி வருவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர் வட்டப்பாறை கிராம மக்கள். 



பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருவதால் இப்பகுதியைச் சுற்றி இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளும், மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளும் இரவு நேரங்களில் இங்கேயே கொட்டப்பட்டு வருவதாகக் கூறும் மக்கள், இதனால் கடும் துர்நாற்றத்துடன் கொசுக்கள் அதிகரித்து விட்டதாகவும், வீடுகளுக்குள் ஈக்கள் படையெடுத்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். 

மேலும், விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இக்கிராமத்தில், நிலப்பகுதில் இருந்து இருநூறு அடிக்கும் அதிகமான ஆழ கல் குழிக்குள் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்து விவசாயமே செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து கிராம மக்கள் சார்பில் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் மனுக்கள் அளித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை, என புகார் கூறுகின்றனர்.

சர்ச்சைக்குரிய இக்கல் குழிக்கு அருகிலேயே மழைநீர் சேமிப்பு குட்டை உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் பவானியாற்றை சென்றடையும் நீர் வழிப்பாதையாகவும் இருக்கின்றது. 

இப்படி பல்வேறு வகையில் சுற்றுச்சூழல் பாதிப்பை உருவாக்கும் இப்பிரச்சினை குறித்து கூடலூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “வட்டப்பாறை கிராம மக்களிடமிருந்து இது குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும், விரைவில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்." என தெரிவித்தனர். 



சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் விவசாயத்தை பாழ்படுத்தும் வகையில் கல் குவாரி குழிக்குள் கழிவுகள் கொட்டப்படுவது நிறுத்தப்படவேண்டும். ஆபத்தான வகையில் எவ்வித தடுப்புக்களுமின்றி காணப்படும் பயன்படுத்தப்படாத கல் குழிகள் மூடப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...