ஆற்றைக் கடக்க முடியாமல் ஆறு நாட்களாக திண்டாடும் மலைவாழ் மக்கள் : அமைச்சர் ஆய்வு

திருப்பூர்: உடுமலை அருகே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றைக் கடக்க முடியாமல் கடந்த ஆறு நாட்களாக அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மழைவாழ் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருப்பூர்: உடுமலை அருகே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றைக் கடக்க முடியாமல் கடந்த ஆறு நாட்களாக அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மழைவாழ் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.



திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கீளானவயல்,தளிஞ்சி வயல், உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. 600-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இதனிடையே மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை கேரளா வனத்துறை கம்பி வேலி அமைத்து பாதை மறித்ததால் கூட்டாறு வழியாக வந்து சென்றனர்.

இந்நிலையில் மழைக் காலங்களில் கூட்டாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக மலைவாழ் மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடா்ச்சிமலை பகுதி மற்றும் கேரளா மாநிலம் மூணாறு சின்னாறு மறையூா் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தளிஞ்சிபகுதி மலைவாழ் மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத காரணத்தால் எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

ரேசன் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனமும் செல்ல முடியாமல் சின்னாறு சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் எந்த வித உதவிகளும் கிடைப்பதில்லை என்றும், மலைவாழ் மக்களின் தேவைகளை அரசுக்குத் தெரிவிக்காமல் அரசையும் மக்களையும் வனத்துறையினர் ஏமாற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது கூட்டாற்றில் 5,000 கனஅடி தண்ணீர் வருவதால் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக கூட ஊருக்குள் வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று கூட்டாறு பகுதியை பார்வையிட்டனர்.



அதன் பின்னர் ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்தவுடன் உயர்நிலை பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், கேரள வனத்துறையினருடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைக்கு சம்பக்காடு பகுதியில் தளிஞ்சி பகுதி மக்கள் பாதையை பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் இந்த செய்தி தொடர்பான செய்திக்கு - கிளிக் செய்யவும்

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...