மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: காவிரி பிரச்சனையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., தமிழகத்திற்கு அரசு எந்த துரோகமும் செய்யவில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: காவிரி பிரச்சனையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., தமிழகத்திற்கு அரசு எந்த துரோகமும் செய்யவில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

குறிச்சி குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்துள்ளார்.

எந்த திட்டம் கொண்டு வந்தாலும் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலரும், அரசியல் கட்சியினர் சிலரும் எதிர்க்கின்றனர். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் எந்த நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு பின்வாங்காது.

காவிரி பிரச்சனையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசு தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை. கர்நாடக தேர்தலுக்காக தான் மத்திய அரசு காலதாமதம் செய்தது. காவிரி பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளே துரோகம் செய்தது.

வருமான வரித்துறை சோதனை, ஊழல் குறித்து பேச தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. அ.தி.மு.க., ஆட்சியைக் கலைத்து விட்டு ஆட்சிக்கு வர ஸ்டாலின் முயற்சிக்கிறார்." என்று அவர் பேசினார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...