தொல்லை தரும் அழைப்புகளின் சிக்கல்களை குறைக்க புதிய விதிகளை பரிந்துரைக்கிறது டிராய்

செல்போனில் வரும் தேவையற்ற அழைப்புகளின் தொல்லைகளில் இருந்து விடுபட புதிய விதிகளை டிராய் பரிந்துரைத்துள்ளது.

செல்போனில் வரும் தேவையற்ற அழைப்புகளின் தொல்லைகளில் இருந்து விடுபட புதிய விதிகளை டிராய் பரிந்துரைத்துள்ளது. 

சீரமைக்கப்பட்ட புதிய விதிகளை டிராய் தற்போது பரிந்துரைத்துள்ளது. அதில், விளம்பரம் மற்றும் சந்தை தொடர்பான அழைப்புகளை சந்தாதாரரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

தேவையற்ற அழைப்புகள் தங்கள் தொலைபேசிக்கு வருவதாக வாடிக்கையாளர்களிடமிருந்து டிராய்க்கு தொடர் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட விளம்பரதாரர் மூலமாக மட்டுமே வியாபார செய்திகள் மற்றும் அழைப்புகளை ஏற்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களை டிராய் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக, வாடிக்கையாளர்களின் அனுமதியைப் பெறலாம் என்றும் டிராய் பரிந்துரைத்துள்ளது. 

"புதிய விதிகள் சந்தாதாரர்களுக்கு அதிக சாதகமாக இருக்கும், ஏனெனில் அவர்கள் ஒப்புதலின்றி இனி விளம்பர அழைப்புகள் வராது. விதியை மீறினால் ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைவார்கள்." என்கிறது டிராய்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...