வால்பாறையில் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானை : மக்கள் பீதி

கோவை: வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை எஸ்டேட் குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் காட்டு யானை புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை: வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை எஸ்டேட் குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் காட்டு யானை புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். 

காஞ்சமலை எஸ்டேட் குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. மேலும், அங்குள்ள சந்திரன் என்பவரது வீட்டினை இடித்து வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. 



யானையின் சத்தம் கேட்ட குடியிருப்பு வாசிகள், சத்தம் எழுப்பி காட்டு யானையை விரட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

யானை வந்தது தொடர்பாக, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வனத்துறையினரே சம்பவ இடத்திற்கு வராமல் இருந்தது வேதனையாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து யானையை காட்டிற்குள் விரட்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...