இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற கொள்ளையன் காவல் துறையிடம் ஒப்படைப்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இரு சக்கர வாகனத்தைத் திருட முயன்ற கொள்ளையனை மருத்துவமனையின் தனியார் காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இரு சக்கர வாகனத்தைத் திருட முயன்ற கொள்ளையனை மருத்துவமனையின் தனியார் காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.



கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதேபோல இங்குள்ள நோயாளிகளை பார்ப்பதற்காகவும் நலம் விசாரிப்பதற்காகவும் உறவினர்களும் நண்பர்களும் வருவதும் போவதுமாகவும் வழக்கம். இதில் இங்கு இருசக்கர வாகனத்தில் நோயாளிகளை சந்திக்க வரும் நோயாளிகளின் உறவினர்கள் வாகனத்தை நிறுத்த மொத்தம் ஐந்து இரு சக்கர வாகன பேருந்து நிறுத்தங்கள் உள்ளது.

அதேபோல, கோவை அரசு மருத்துவமனையில் மொத்தம் 78 தனியார் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அரசு மருத்துமனையில் புறக்காவல் நிலையம் உள்ளது. இதில் இரண்டு போலிசார்கள் உள்ளனர். 



இந்நிலையில், இன்று மாலை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருச்சியைச் சேர்ந்த குழந்தை சாமியின் மகன் ராஜன்(53)என்பவர் திருட முயற்சித்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் காவலர்கள் திருடனை கையும் களவுமாக பிடித்தனர். 



பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் திருடனை ஒப்படைத்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் இரு சக்கர வாகனத்தைத் திருட முயன்றவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...