வெளியேறியது ஓஃபோ; கைமாறியது ஒப்பந்தம்

கோவை: பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்ட மிதிவண்டி பகிர்தல் திட்டத்தின் ஒப்பந்தம் ஓஃபோ நிறுவனத்திடம் இருந்து வேறொரு தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு, மீண்டும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை: பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்ட மிதிவண்டி பகிர்தல் திட்டத்தின் ஒப்பந்தம் ஓஃபோ நிறுவனத்திடம் இருந்து வேறொரு தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு, மீண்டும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டி பகிர்தல் திட்டம் கடந்த மார்ச் மாதம் கோவை மாநகராட்சியால் தொடங்கப்பட்டது. சுமார் 38 கோடி ரூபாய் முதலீடு செய்து பரீட்சார்த்த முறையில் இத்திட்டத்தை செயல் படுத்த ஓஃபோ என்கின்ற சீன நிறுவனம் முன்வந்தது.

சோதனை அடிப்படையில் பல கல்லூரி வளாகங்களில் ஓஃபோ மிதிவண்டி பகிர்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. மிதிவண்டி பகிர்தல் திட்டம் குறித்த மக்களின் மனநிலையையும், பயன்பாடு குறித்த தகவல்களை திரட்டவும் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.



சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவக் கூடிய மிதிவண்டி பகிர்தல் திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பெரும்பாலானோர் ஓஃபோ மிதிவண்டிகளை முறையாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் வெகுசிலர் மிதிவண்டிகளை சேதப்படுத்தி வீட்டுக்குள் வைத்துக் கொண்டனர். ஜிபிஎஸ் உதவியோடு இதனை கண்டறிந்த ஓஃபோ நிறுவனத்தினர் அவற்றை திரும்பப் பெற்று பழுதுபார்த்து வந்தனர்.

கடந்த ஜுன் மாதம் சோதனை அடிப்படையில் இலவசமாக செயல்படுத்தப்பட்டு வந்த மிதிவண்டி பகிர்தல் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, 'ஓஃபோ நிறுவனத்தினர் தனது சோதனைகளை முடித்துக் கொண்டு, மக்களின் மிதிவண்டி பயன்பாடு குறித்த தகவல்களை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால், மிதிவண்டி பகிர்தல் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குறைந்தபட்ச கட்டணத்தோடு முழு பயன்பாட்டிற்கு வர இருப்பதாகவும்' கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், மிதிவண்டி பகிர்தல் திட்டத்தில் இருந்து ஓஃபோ நிறுவனம் விலகியதாக கூறப்படுகிறது. மேலும், சீன நிறுவனமான ஓஃபோ, சர்வதேச அளவில் மிதிவண்டி பகிர்தல் திட்டத்தை செயல்படுத்தி தோல்வி அடைந்துள்ளதாகவும், பெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஓஃபோ நிறுவனம் விலகியதால், இத்திட்டத்தை மீண்டும் சோதனை அடிப்படையில் செயல்படுத்த மற்றொரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...