தீண்டாமை திணிப்பைக் கண்டித்து சாலை மறியல் : சமையலர் பாப்பாளுக்கு மீண்டும் அதே பள்ளியில் பணி வழங்க வலியுறுத்தல்

திருப்பூர்: ​​திருப்பூரில் ஒரு சில சமூகத்தினரின் எதிர்ப்பால் அருந்ததியின ஊழியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள், தலித் விடுதலைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சேவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: ​​திருப்பூரில் ஒரு சில சமூகத்தினரின் எதிர்ப்பால் அருந்ததியின ஊழியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள், தலித் விடுதலைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சேவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



அவிநாசியை அடுத்த திருமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 75 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சமையலராக அதேப் பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் பணியிட மாற்றத்தால் கடந்த திங்கட்கிழமையன்று (ஜுலை16) பணிக்கு வந்தார். இதையறிந்த மற்ற சமூகத்தினர், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் சமையல் செய்தால் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி, பள்ளியில் இருந்து 24 குழந்தைகளை அழைத்துச் சென்றனர். 



அதோடு, இவர்களது புகாரால் பாப்பாளை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அதிகாரி இன்று உத்தரவிட்டார். இதனைக் கண்டிக்கும் விதமாகவும், தாழ்த்தப்பட்ட பாப்பாளை இதே பள்ளியில் சமையலராக பணி அமர்த்தக் கோரியும் விடுதலை சிறுத்தைகள், தலித் விடுதலைக் கட்சி, ஆதி தமிழர் பேரவை மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, சாதியைக் காரணம்காட்டி பணியிட மாற்றம் செய்த வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.



இது குறித்து தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியுடன், போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சேவூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் சரவணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...