துணை முதலமைச்சர் வருகையின் போது கோவை விமான நிலையத்தை சூழ்ந்த கரும்புகை

கோவை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையின் போது கோவை விமான நிலையத்தில் வானுயர உயர்ந்த கரும்புகை காரணமாக பரப்பு ஏற்பட்டது.

கோவை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையின் போது கோவை விமான நிலையத்தில் வானுயர உயர்ந்த கரும்புகை காரணமாக பரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார். அப்போது, விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் வானுயர அளவிற்கு கரும்புகை எழும்பியது.



இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தபடி வேகமாக உள்ளே சென்றது. இதனால் வெளியே நின்றிருந்த பயணிகளின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க., தொண்டர்கள் பதற்றமடைந்தனர்.

இந்த சூழலில், இது வழக்கமாக நடைபெறும் தீ தடுப்பு ஒத்திகை தான் என்று விமான நிலைய அதிகாரிகள் விளக்கமளித்ததால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...