நாளை முதல் நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் : கோவையில் 10,000 லாரிகள் ஓடாது

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்கள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது


பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்கள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வர வேண்டும், டோல்கேட் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டர் காங்கிரஸ் நாடு தழுவிய வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் நாளை முதல் 10,000-க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாது. 

இதன் காரணமாக பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், இதனை சமாளிக்கும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன், பொள்ளாச்சி சப்- கலெக்டர் மற்றும் அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வழங்கல் துறை அதிகாரிகள் ஆயில் கார்பரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என எச்சரிக்கை விடுத்தார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...