ஸ்டாலின் லண்டனுக்கு கிளம்பியவுடன் மழை பெய்தது - முதலமைச்சர் பழனிச்சாமி கிண்டல்

கோவை : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனுக்குக் கிளம்பியவுடன் இயற்கை மழையாகப் பெய்து அணைகளை நிரப்பியுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டலடித்துள்ளார்.


கோவை : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனுக்குக் கிளம்பியவுடன் மழை பெய்து அணைகள் நிரப்பியுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டலடித்துள்ளார்.

சேலத்தில் நாளை மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாளை டெல்டா பாசன விவசாயிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்வதாகக் கூறினார். 



சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக யாரும் மிரட்டப்படவில்லை எனவும் 85% நில அளவீடு பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், மீதம் 15% பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும் தெரிவித்தார். ஒரு சில நில உரிமையாளர்கள் ஆதங்கத்தை தெரிவித்தாகவும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தப்படும் என நம்பிக்கை அளித்தார்.

மேலும், முட்டை விவகாரத்தில் உரிய முறையில் டெண்டர் விடப்பட்டு வருகிறதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2,031 கோடிக்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், அப்படி இருக்கையில் 5000 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாகக் குற்றம் சட்டவது நகைப்பிற்குரியது என்கிறார். 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை துரிதமாக நடந்து கடுமையான தண்டனைப் பெற அரசு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

பாசனத்திற்கு முறையாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் பழனிச்சாமி, பத்திரிகை விளம்பரம் உள்ளிட்ட அதிக செலவு, நிர்வாக பிரச்சினை காரணத்தினால் மாநில அளவு டெண்டர் முறை ஜெயலலிதா அரசால் மீண்டும் கொண்டு வரப்பட்டதாகவும் உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அரசுக்குச் சாதகமாக வந்ததாக சுட்டிக் காட்டினார். 

மேலும், தரமான முட்டை மக்களுக்கு வழங்கப்படுவதாகவும், பாஜக ஆளுகின்ற மாநிலமான ஜார்கண்ட்டில் ஒரு முட்டை ரூ.5.93க்கு கொள்முதல் செய்தும், ஆந்திராவில் ரூ.4.68க்கு வினியோகம் செய்யப்படுவதாகவும் தமிழகத்தில் ரூ.4.34 க்கு கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகிறது என்று பட்டியிலிட்டார். 

கோவை அவினாசி சாலை, உப்பிலிப்பாளையம் முதல் விமான நிலையம் வரையிலான 10 கி.மீ. தூரத்திலான பணிகள் 4 மாதங்களில் துவங்கப்பட்டு, 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உக்கடம்-ஆத்துபாலம் பணிகள் விரிவாக நடந்து வருவதாகவும், குறுக்கே உள்ள சுங்கச்சாவடிக்கு 3 மாத காலம் இருக்கிறது, அதன் பிறகு அந்தப் பகுதியை சேர்த்தே பாலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...