'கோவை புத்தக திருவிழா' நாளை மறுநாள் தொடக்கம்

கோவை : கொடிசியா அரங்கில் கோவை புத்தக திருவிழா நாளை மறுநாள் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது.


கோவை : கொடிசியா அரங்கில் கோவை புத்தக திருவிழா நாளை மறுநாள் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது. 

தென்னிந்தியாவின் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசியின் இணைந்து நடத்தும் இந்தப் புத்தகக் கண்காட்சி, கோவை கொடிசியா அரங்கில் நாளை மறுநாள் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹூசூர் சாலையில் உள்ள கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது. 

அப்போது, புத்தகக் கண்காட்சி தலைவர் சவுந்தரராஜன் பேசுகையில், "இப்புத்தக திருவிழாவில் 265 அரங்குகள் அமைக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம் மட்டுமில்லாமல் பிற இந்திய மொழிகளின் நூல்களின் பதிப்புகள் கண்காட்சியில் கிடைக்கும். மேலும், இக்கண்காட்சியில் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த 175 பதிப்பகங்கள் பங்கேற்க உள்ளனர். புத்தகக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள், விவாத அரங்குகள், உரை நிகழ்ச்சிகள் உள்பட சிறப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறும்.

இந்த ஆண்டு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு கொடிசியாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு 60,000 பார்வையாளர்கள் இந்தக் கண்காட்சியை பார்வையிட்டனர். ரூ. 2.5 கோடி அளவிற்கு வணிகமும் நடைபெற்றது. இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். பார்வையாளர்கள் காலை 11.00 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம். இதனைப் பள்ளி கல்வி துறை செயலர் உதயசந்திரன் தொடங்கி வைக்க உள்ளார்," என்றார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...