வரவேற்பில்லாத நடத்துனர் இல்லாப் பேருந்துகள் : வசூல் குறைவால் பேருந்துகளைக் குறைக்க திட்டம்..?

கோவை: கோவையில் ஒரு சில வழித்தடங்களில் வசூல் குறைவு காரணமாக நடத்துனர் இல்லா பேருந்துகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை: கோவையில் ஒரு சில வழித்தடங்களில் வசூல் குறைவு காரணமாக நடத்துனர் இல்லா பேருந்துகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் இருந்து மதுரை, சேலம், திருச்சி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட வழித்தடங்களில் கோவை மண்டலத்தில் 40 பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு போக்குவரத்து கழகம் சார்பில் ஈரோட்டில் இருந்து கோவைக்கு ‘ஈரோ 100' என்கிற பெயரில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், சேலம், திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. பேருந்துகளின் இருக்கைகளில் முழுவதுமாக நிரம்பிவிடுகின்றன. ஆனால், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் வழித்தடங்களில் பயண இருக்கைகள் முழுவதுமாக நிரம்புவதில்லை. இதனால், வசூல் மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால், இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் நடத்துனர் இல்லாப் பேருந்துகள் குறைக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை - மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் பகுதிகளுக்கு நடத்துனர் இல்லாப் பேருந்துகளின் இயக்கம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 54 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில் காலை, மாலை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் 14 முதல் 17 பயணிகள் மட்டுமே பெரும்பாலும் பயணிக்கின்றனர். இதனால், இந்த வழித்தடங்களில் நடத்துனர் இல்லாப் பேருந்துகளை காலை, மாலை மட்டும் இயக்க அல்லது குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் முக்கிய நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தி செல்லவும் யோசனை செய்யப்பட்டு வருகிறது," என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...