யானைகள் வழித்தடத்தை மீட்பதில் குழப்பம்: தமிழக அரசு - உச்சநீதிமன்றம் மாறுபட்ட நிலைப்பாடு

தமிழக வனப் பாதுகாப்பில் மாநில அரசும், உச்சநீதிமன்றமும் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதால், யானைகள் வழித்தடத்தை மீட்டெடுப்பதில் குழப்பம் நிலவி வருகிறது.

தமிழக வனப் பாதுகாப்பில் மாநில அரசும், உச்சநீதிமன்றமும் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதால், யானைகள் வழித்தடத்தை மீட்டெடுப்பதில் குழப்பம் நிலவி வருகிறது. 

தமிழக மலைப்பிரதேசங்களில் உள்ள யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், யானை வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்கள் மற்றும் 400 தனியார் விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், யானை வழித்தடத்தில் கட்டுமானப் பணிகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, 4 வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக வனப்பகுதிகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டெடுக்கும் வகையிலான உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்தனர்.

இதனிடையே, கடந்த 9-ந் தேதி தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனியார் வன பாதுகாப்பு சட்ட திருத்தம் அன்றைய தேதி முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார் என்று சட்டசபையில் அறிவித்தார். இதன் மூலம், தனியார் வன பாதுகாப்பு சட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிலங்களை விற்க, வாங்க, மரங்களை வெட்டவோ அனுமதியளிக்கப்பட்டுள்ளது.



யானைகள் மற்றும் யானையின் வழித்தடங்களைப் பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் வகுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், வனத்துறையினருக்கு சொந்தமான இடங்களை விற்கவோ, பயன்படுத்தவோ அனுமதி அளித்து தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்திருப்பது, உச்சநீதிமன்றத்தின் நோக்கத்திற்கு முரணாக இருக்கிறது. இதன்மூலம், யானைகள் மற்றும் யானையின் வழித்தடங்களை மீட்டெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் கே. மோகன்ராஜ் கூறுகையில், "தமிழக அரசு மேற்கொண்டுள்ள சட்டத்திருத்தம், யானைகளை வழித்தடத்தை சட்டப்பூர்வம் ஆக்காது. சில தனியார் வனப் பகுதிகளில் கட்டுமானங்களை மேம்படுத்துவதற்கான கோரிக்கை இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நிராகரிக்கப்பட்டாலும், பின்னர் தமிழக அரசின் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தப்படும். 

இதன்மூலம், ஊழலுக்கு வழிவகை செய்யும். மேலும், இந்தப் பகுதிகள் முக்கிய சுற்றுச்சூழல் மிக்கவையாகும். மேலும், சிறுசிறு காவிரி நீர் ஊற்றுகளாக இருக்கும் இந்தப் பகுதி, யானைகளின் வழித்தடங்களாகும். இதனை ஆக்கிரமிப்பு செய்தால், வனச் சுற்றுச்சூழல்முறையில் பிரச்சனைகள் ஏற்படும்," என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...