கோவையில் மாணவி மாடியில் இருந்து விழுந்த சம்பவம் : போலி பயிற்சியாளர் ஆறுமுகசாமிக்கு 4 நாட்கள் காவல்

கோவை: கோவை நரசிபுரம் அருகே தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்யின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி பயிற்சியாளர் ஆறுமுகசாமிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை நரசிபுரம் அருகே தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்யின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி பயிற்சியாளர் ஆறுமுகசாமிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

கோவை நரசிபுரத்தில் செயல்பட்டு வரும் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 12-ம் தேதி பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, பேரிடர் காலங்களில் 2-வது மாடியில் இருந்து குதிக்கும் பயிற்சி மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. பயிற்சியின் போது, லோகேஸ்வரி என்ற மாணவியை இரண்டாவது மாடியில் இருந்து குதிக்குமாறு கூறிய போலி பயிற்சியாளர் ஆறுமுகம், அவரை கீழே தள்ளியுள்ளார். அப்போது, நிலை தடுமாறி முதல் மாடியில் இருந்த மழைத் தடுப்பு அமைப்பு மீது மோதி விழுந்த லோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆறுமுகத்தின் சான்றிதழ்கள் போலி என்பதைக் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கண்ணன், 20-ம் தேதி வரை 4 நாட்கள் ஆறுமுகத்தினை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...