வால்பாறை, திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதியின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம்

வால்பாறை: வால்பாறை மற்றும் திருப்பூர் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.



வால்பாறை: வால்பாறை மற்றும் திருப்பூர் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 83 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 156 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார் அருவிக்கு வரும் நீரின் அளவு 4,354.04 கனஅடியாகும். அருவியில் இருந்து சுரங்கம் வழியாக 3,129.92 கனஅடியும், ஷட்டர் வழியாக 1,184.97 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 

நீரார் அணையில் மழையின் அளவு 105 மி.மீ., ஆகும். அணைக்கு விநாடிக்கு 1,265.03 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 1,360.35 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோலையாறு அணையில் 95 மி.மீ., மழை பெய்துள்ளது. நீர்மட்டம் 164.42 (160) அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 5,643.20 கனஅடியாக உள்ளது. விநாடிக்கு 6,310.99 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பைபாஸ் வழியாக 2,043.52 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, ஷட்டர் திறக்கப்பட்டு பரம்பிகுளம் அணைக்கு 2,419.21 கன அடி நீரும், 603.47 கன அடி சோலையார் பவர்ஹவுஸ் 2 வழியாக மின் உற்பத்திக்குப்பின் கேரளா செல்கிறது.



பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம்: 164.42 (160அடி) அடியாக உள்ளது. தொடர் மழையினால் அணைக்கு 10,584. 38 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 755 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, ஆழியார் அணை, அதன் மொத்தக் கொள்ளளவான 120 அடியில் 103.50 அடியளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் நீர்வரத்து 3,990 கனஅடியாக இருக்கிறது. நீர்வெளியேற்றம் 34 கனஅடியாக உள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அணையான திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 37.18 (60அடி) அடியாக உள்ளது. நீர்வரத்து 1,101 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர்வெளியேற்றம் 28 கனஅடியாகவும் உள்ளது. அமராவதி அணையின் நீர்மட்டம் 86.19 (90 அடி) அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து 6,146 கனஅடியாக இருக்கிறது. நீர்வெளியேற்றம் 2,952 கனஅடியாக உள்ளது.



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...