சமூக ஊடகங்களைக் கண்காணிக்க மத்திய அரசு முடிவு - வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை

நாட்டில் உள்ள 716 மாவட்டங்களிலும் சமூக ஊடகங்களைக் கண்காணிக்க வல்லுநர்களை அமர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 716 மாவட்டங்களிலும் சமூக ஊடகங்களைக் கண்காணிக்க வல்லுநர்களை அமர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் அலுவலகமும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும் இணைந்து சமூகஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோரைத் தண்டிப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. அதன்படி நாட்டில் உள்ள 716 மாவட்டங்களிலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைக் கண்காணிக்கச் சமூக ஊடகத் தொடர்புப் பிரிவு அமைத்து அதில் வல்லுநர்களைப் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பொறியியல் பிரிவான பிஇசிஐஎல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இந்த அமைப்பு அனைத்து ஊடகங்கள் மற்றும் நிகழ்வுகளில் இருந்து தரவுகளைச் சேகரிப்பதுடன், செய்தித்தாள்கள், கேபிள் தொலைக்காட்சிகள், பண்பலை வானொலி, ஆகியவற்றையும் கண்காணிக்கும். 

பொய் செய்திகள், வதந்திகளை பரப்பவர்கள் மீது ஐ.பி.சி 153 மற்றும் 295ஆம் பிரிவிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

இதன் படி, வாட்ஸப் மூலம் கலவரங்களை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...