உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நேற்று பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நேற்று பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 



உதகையில் இருந்து குன்னூர் நோக்கி வந்த பேருந்து நேற்று எதிர்பாராதவிதமாக, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நடத்துநர் பிரகாஷ் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு முதலமைச்சரின் உத்தரவுப்படி, குழுக்கள் அமைக்கப்பட்டு உரிய உதவிகள் செய்யப்பட்டுள்ளது. வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்தவர்களுக்கும், மேட்டுப்பாளையம் பகுதியில் யானை தாக்கி காயமடைந்தவருக்கும் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

அதேபோல, மழையினால் சுவர் இடிந்து விழுந்து வந்த இரண்டு நபர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "சட்டப்பேரவையில் 900 பேருக்கு விபத்துக்களால் உண்டான பாதிப்புகளுக்கும், இயற்கையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும். விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்படும் என்றார்

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவர் அசோகன், இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர்வேல் உள்ளிட்ட பல மருத்துவர்களும் உடனிருந்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...