கோவையில் மனைவி இறந்த துக்கம் தாழாமல் கணவன் தற்கொலை

கோவை: அரசு மருத்துவமனை எதிரே உள்ள குளத்தின் ஓரத்தில் இருக்கும் மரத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவர் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: அரசு மருத்துவமனை எதிரே உள்ள குளத்தின் ஓரத்தில் இருக்கும் மரத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவர் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (26). இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பாக கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி இரவு கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் மணிகண்டன் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். 

ஆத்திரமடைந்த சித்ரா வீட்டில் யாரும் இல்லாதபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயங்களோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சித்ராவை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சித்ரா இன்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார்.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட மணிகண்டன் திருச்சி சாலையில் கிளாசிக் டவர் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். 



மனைவியின் இழப்பை வலியைத் தாங்க முடியாமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் உள்ள மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...