இன்று சர்வதேச இரத்த தான தினம்: மரண விளிம்பில் இருப்பவர்களுக்கும் வாழ்வளிக்கும் இரத்தக் கொடையாளிகளை போற்றுவோம்

சர்வதேச இரத்த தான தினம் ஆண்டுதோறும் இன்று (ஜுன் 14) ஐ.நா. சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.


சர்வதேச இரத்த தான தினம் ஆண்டுதோறும் இன்று (ஜுன் 14) ஐ.நா. சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் சிறந்த தானங்களில் ஒன்றாக இரத்த தானம் திகழ்ந்து வருகிறது. விபத்து போன்ற எதிர்பாராத சம்பவங்களுக்கும், பிரசவம் போன்ற சந்ததிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வுகளுக்கான சிகிச்சைகளுக்கும் இரத்தம் தேவைப்படுகிறது. முன்னொரு காலத்தில், இரத்த தானம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், அறுவை சிகிச்சைக்கு தேவையான இரத்தப் பிரிவுகளை பணத்தைக் கொடுத்தே பெற வேண்டிய நிலை இருந்து வந்தது. அப்படி இல்லாவிட்டால், நமது இரத்தத்தைக் கொடுத்து, சிகிச்சைக்கு தேவையான பிரிவு இரத்தத்தை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால், தற்போதைய நவீன காலகட்டத்தில் விஞ்ஞானம் மட்டுமல்ல, இரத்த தானம் போன்ற மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உதவும் வகையில், மனித நேயமும் வளர்ச்சியடைந்துள்ளது என்பதே உண்மை. அதனை ஊர்ஜிதப்படும் வகையில், இப்போதெல்லாம், தொலைப்பேசியின் வாயிலாக அழைத்தாலே, போதும் என்றும் சொல்லும் அளவிற்கு இரத்தம் கொடுக்க கொடையாளிகள் வரிசையில் நிற்கின்றனர்.



இதற்கு உதாரணமாக, இரத்த தானத்தால் பயனடைந்த திருப்பூரைச் சேர்ந்த ஆசிரியர் மாலதி என்பவரைச் சந்தித்து பேசினோம். அவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆலந்துறை அருகே விபத்தில் சிக்கியதில், 13 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, 'அன்னைக்கரங்கள்' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இரத்த பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவர் நலமுடன் உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "4 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கிய போது, தனது நிலையைக் கண்ட மருத்துவர்கள் சிலர் கைவிரித்து விட்டனர். எனது அறுவை சிகிச்சைக்கு 10 யூனிட்களுக்கும் மேலாக இரத்தம் தேவைப்பட்டது. நான் தற்கொலையின் விளிம்பில் இருந்தேன். இந்த நிலையில், அன்னைக்கரங்களின் உறுப்பினர்கள் அளித்த இரத்தக் கொடையால், 13 யூனிட் இரத்தங்களைப் பயன்படுத்தி 15 ஆபரேசன்கள் செய்யப்பட்டது. சுமார் ஒரு மாத காலம் ஐ.சி.யூ.வில் இருந்தேன். தற்போது, நான் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். அன்னைக்கரங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார். முதுகலை பட்டதாரியான மாலதி, தற்போது கத்தாரில் அல்-வுகையர் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



கோவையில் இலாப நோக்கமில்லாமல் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களில், அன்னைக்கரங்களும் ஒன்று. 8 ஆண்டுகளாக இரத்தக் கொடையாளிகளை, பயனாளிகளுடன் இணைக்கும் செயலை செய்து வருகிறது.

"உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வந்த மாலதிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. அவரிடம் இருந்து இரத்தக் கொடையின் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொண்டோம்," என்கிறார் அன்னைக்கரங்களின் நிறுவனர்களில் ஒருவரான எல். கோபிநாத். மேலும், அரிய வகை பிரிவுகளான பாம்பே ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏபி நெகட்டிவ், பி நெகட்டிவ் மற்றும் ஏ நெகட்டிவ் போன்ற கொடையாளிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேபோல இரத்தக் கொடையாளியான கோவை மருத்துவக் கல்லூரி மாணவர் கிருபா சந்திரசேகர் கூறியதாவது:- ஒரு கார் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு 10 யூனிட் இரத்தம் தேவைப்பட்டது. அவருடைய இரத்தப் பிரிவு மிகவும் அரிதானது. அப்போதுதான், இரத்த தானம் எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்து கொண்டேன். நான் இரு முறை இரத்தம் கொடுத்துள்ளேன். கடந்த மாதம் கடைசியாக கொடுத்தேன், என்றார்.



இரத்த தானம் எவ்வளவு முக்கியமானது என்பது சாதாரண மனிதனுக்கு அவ்வளவு எளிதாகப் புரியாது. மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒருவருக்கு இரத்தம் தேவைப்படும் சூழலில், இரத்தத்தின் தேவை தெரிய வரும். ஏனெனில், இரத்தத்தை யாராலும் உருவாக்க முடியாது. கொடையாளிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மருந்து, மாத்திரை, ஊசி போட்டுக் கொண்டவர்கள், மது அருந்தியவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள் 24 மணி நேஇரத்திற்கு இரத்தத்தை கொடுக்கக் கூடாது.

நாட்டில் 1.2 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில், 1.2 கோடி யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், ஆண்டிற்கு 1 கோடி யூனிட் இரத்தம் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரத்தப் பிரிவுகளான ஏ.பி.ஓ. ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் என்பவரின் பிறந்த தினத்திலே இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...