உதகை நகராட்சியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த விடுதிகளுக்கு சீல்

நீலகிரி : உதகை நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கட்டிடங்கள் மற்றும் விடுதிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக சீல் வைத்தனர்.


நீலகிரி : உதகை நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கட்டிடங்கள் மற்றும் விடுதிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக சீல் வைத்தனர்.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கான்கீரிட் கட்டிடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.  இந்த நிலையில், 1,330 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி கட்டப்பட்ட 1.330 கட்டிடங்களை மாஸ்டர் பிளான் சட்டம் மூலமாக இடிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, கட்டிடங்களை இடிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 



இந்நிலையில், உதகை நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் மீனாட்சி தலைமையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனியார் விடுதிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் இன்று சீல் வைத்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...