கூடலூர் அருகே காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானை : சிகிச்சை அளிப்பதில் காலந்தாழ்த்தும் வனத்துறையினர்

நீலகிரி : கூடலூர் அருகே வெடிவிபத்தில் காயம் அடைந்து உயிருக்குப் போராடிய வரும் காட்டு யானைக்கு, சிகிச்சை அளிப்பதில் வனத்துறையினர் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

நீலகிரி : கூடலூர் அருகே வெடிவிபத்தில் காயம் அடைந்து உயிருக்குப் போராடிய வரும் காட்டு யானைக்கு, சிகிச்சை அளிப்பதில் வனத்துறையினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். 

பந்தலூர் தாலுகா கன்னம்பள்ளி தனியார் தோட்டம் அருகே கடந்த சில தினங்களாக காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்து வந்துள்ளது. சுமார் 12 வயதுடைய அந்த ஆண்யானை உடல் நலக்குறைவு ஏற்பட்டு, வாய் பகுதியில் காயத்துடன் உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 



இந்நிலையில், நேற்று காலை இந்த யானையின் உடல்நலம் மிகவும் மோசமடைந்து தள்ளாடியபடி, உயிருக்கு ஆபத்தான நிலையில் தேயிலை தோட்ட சாலையில் வந்து விழுந்து கிடந்தது. கடந்த சில நாட்களாகக் காயத்துடன் திரிந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதில் வனத்துறையினர் அலட்சியம் காட்டியுள்ளனர். மேலும், கூடலூர் மற்றும் முதுமலை பகுதியில் கால்நடை மருத்துவர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் இருந்து கால்நடை மருத்துவரை வனத்துறையினர் அழைத்துள்ளனர். 

முதுமலை புலிகள் காப்பகத்தில் நிரந்தரமாக இருக்கும் கால்நடை மருத்துவர் தான் காயம் ஏற்படும் விலங்குகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பார். தற்போது, முதுமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதால், யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தனியார் தோட்ட உரிமையாளர்கள் பன்றிகளை விரட்டக் கிழங்கில் வெடிப்பொருளை நிரப்பி திருட்டுத்தனமாக வெடிக்க வைப்பார்கள், அவ்வாறு வைக்கப்பட்ட வெடிபொருட்களை நிரம்பிய கிழங்கை உண்ட யானைக்கு இப்படி காயம் ஏற்பட்டிருக்கலாம் அல்லது தேயிலை செடிகளுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தாலும் வாய்ப்புண் ஏற்பட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.

கடந்த 3-ம் தேதி சேரங்கோடு படச்சேரி பகுதியில் இதேபோல வாயில் காயத்துடன், உடல் நலம் குன்றிய நிலையில் ஊருக்குள் விழுந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அடுத்தடுத்து, யானைகள் உடல்நலம் குன்றி பிரச்சினைக்கு உள்ளாவதால் வனத்துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...