கோவை : கோவையில் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளலூர் ராஜவாய்க்காலை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நொய்யல் ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர், வெள்ளலூர் ராஜவாய்க்காலை அடைந்துள்ளது. ஆனால், வாய்க்காலில், புதர்கள் மற்றும் குப்பைகள் மண்டிக்கிடப்பதால், தண்ணீர் பாய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டது.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.