தினசரி மார்க்கெட் இடைத்தரகர்களைக் கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : தினசரி மார்கெட்டில் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இடைத்தரகர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : தினசரி மார்கெட்டில் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இடைத்தரகர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பல்லடம் அருகே தென்னம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தினசரி காய்கறி மார்கெட்டில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட காய்கறிகளை நேரடியாக விற்க வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள இடைத்தரகர்கள் விவசாயிகள் வருவதற்குள் வெளிமாநில காய்கறிகளை விற்பனை செய்து விடுகின்றனர். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இடைத்தரகளை கண்டித்து தினசரி மார்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது,  மார்கெட்டிற்குள் சென்ற விவசாயிகள் இடைத்தரகர்களிடம் இனி காய்கறிகளை விற்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருதரப்பினரிடையே சமரசத்தை ஏற்படுத்தினர். பின்பு, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...