குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையைக் கண்டித்து 18-ம் தேதி உக்கடத்தில் போராட்டம்

கோவை: உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குடியிருப்பு பகுதிகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 18-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.



கோவை : உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குடியிருப்பு பகுதிகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 18-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது. 



உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒப்பணக்கார வீதி முதல் ஆத்துப்பாலம் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பாலம் அமையவிருக்கும் பகுதி அருகே 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. பாலம் கட்டுமானப் பணிகளுக்காக இந்தக் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனைக் கண்டித்து, உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் வரும் 18-ம் தேதி உக்கடம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில், கூட்டியக்கத்தில் அங்கம் வகிக்கும் தந்தை பெரியார் திராவிடக் கழகம், திராவிட விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை, பீபுள் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் பங்கேற்க இருக்கின்றன.



இந்த நிலையில், உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் உக்கடம் பகுதியில் கட்டப்படும் பாலம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரஸ் கிளப் அரங்கில் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...