அரசு பள்ளிகளை பாதுகாக்க கோரி முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை

கோவை: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க கோரியும், தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையை தடுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் மாசிலாமணி கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை உடனடியாக நிர்ணயம் செய்யவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க கோரியும், தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையை தடுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் மாசிலாமணி கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை உடனடியாக நிர்ணயம் செய்யவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மேலும், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து தனியார் பள்ளிகளிலும் உறுதி செய்திட வலியுறுத்தியும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாணவர்கள் கோஷமிட்டனர். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் பீளமேடு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கழிப்பறை உபயோகிக்கும் வண்ணம் தரமாக இல்லை என தெரியவந்துள்ளதாகவும், ஆண்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை என்பதும் விளையாட்டு மைதானம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.



மேலும், ஆண்டிபாளையம் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ள சுற்றுச்சுவர் மிகவும் பழுதடைந்தும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சேரிபாளையம் உயர்நிலைப் பள்ளியில் இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி 95 சதவீதமாக இருப்பதாகவும், ஆனாலும், அந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி சுற்றுச்சூழல் மற்றும் கல்வி கற்க போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பது தெரியவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவினாசி சாலையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் போதுமான சுகாதார பணிகள் மாணவர்களே மேற்கொள்வதாகவும், அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளை சரி செய்து, மாணவர்கள் கல்வி கற்க வசதியாக அனைத்தையும் சீரமைக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது. 

இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...