மனநலம் பாதித்த பெண்ணுக்கு சீமந்தம் செய்து மகிழ்வித்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை

கோவை: கோவையைச் சேர்ந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர், மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் ஒருவருக்கு சீமந்தம் செய்து மகிழ்வித்த சம்பவம் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


கோவை: கோவையைச் சேர்ந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர், மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் ஒருவருக்கு சீமந்தம் செய்து மகிழ்வித்த சம்பவம் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.



கோவையை மையமாகக் கொண்டு ஈர நெஞ்சம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் முதியோர் காப்பகத்தை நிர்வகித்து வரும் இந்த அறக்கட்டளையினர், அவ்வப்போது மனதை நெகிழ வைக்கும் உதவிகளைச் செய்து வருகின்றனர். 

இதுவரை, ஆதரவின்றி தனித்துவிடப்பட்ட முதியவர்களை மீட்டு, அவர்களுக்கு நல்வாழ்வு அளித்துள்ளனர். அதோடு, குடும்பத்தில் இருந்து எதேர்ச்சையாக பிரிந்துவிட்ட முதியவர்களை அவர்களது குடும்பத்துடனேயே சேர்த்தும் வைத்தனர்.

இந்த சூழலில் தான், மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் ஒருவருக்கு சீமந்தம் செய்து மகிழ்வித்துள்ளது ஈர நெஞ்சம்.



ஆதரவு

கோவில்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார் ராஜலட்சுமி என்ற 21 வயது பெண். தாய்-தந்தை அரவணைப்பில்லாத இவருக்கு மனநலம் பாதிக்க சிறுவயதில் இருந்தே தனது உறவினர்களின் நிழலில் வளர்ந்துள்ளார். 

இவரது வெகுளித்தனத்தைப் பயன்படுத்தி, தனியார் மில்லில் பணியாற்றிய ஒரு நபர் ராஜலட்சுமியை கர்பமாக்க, குரல்கொடுக்க ஆதரவின்றி தனித்து விடப்பட்டார். இது குறித்து அவர் தரப்பில் போலீசாரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. 

இந்த சூழலில் தான், ஈரநெஞ்சம் ராஜலட்சுமிக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. 7 மாத கர்ப்பிணியான ராஜலட்சுமி தற்போது ஈர நெஞ்சம் நிர்வகிக்கும் முதியோர் காப்பகத்தில் வாழ்கிறார். 

இதுகுறித்து ஈர நெஞ்சத்தை சேர்ந்த மகேந்திரன் கூறுகையில், "ஒரு ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதித்த பெண்ணால், குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பது கடினம். 

ராஜலட்சுமியை கருக்கலைப்பு செய்ய கூறி அவரது உறவினர்கள் வலியுறுத்திய போதும், தான் சுமக்கும் குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்து, கருக்கலைப்பு செய்ய மறுத்தார். 

இந்த திடகாத்திரமான மனமே, அவரை ஒரு நல்ல அன்னையாக மாற்றும் என்று நினைக்கிறோம். அவரது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரை பாதுகாக்க உள்ளோம்." என்றார்.

சீமந்தம்

நிறைமாத கர்ப்பிணிக்கு சீமந்தம் செய்து அவர் மனதை குளிர்விப்பது நம் சமுதாயத்தில் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சி. ஆதரவளித்ததோடு அல்லாமல், ஒரு படி மேலே சென்று ராஜலட்சுமிக்கு சீமந்தம் செய்து அழகு பார்த்துள்ளனர் நெஞ்சில் ஈரம் கொண்ட ஈர நெஞ்சத்தினர். 



அதன்படி, நேற்று (திங்கட்கிழமை), அந்த முதியோர் காப்பகத்திலேயே அவருக்கு சீமந்தம் நடைபெற்றது. பழங்களும், பூக்களும் நிரம்பிய தட்டுக்களுடன், அங்குள்ள முதியவர்களின் ஆசியுடன் நடைபெற்றது அந்த ஆதரவற்ற பெண்ணின் சீமந்தம்.



இந்த நிகழ்வு, ராஜலட்சுமியை மட்டுமல்லாது, மக்கள் மனதையும் குளிர்வித்துள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...