மக்களிடம் வரவேற்பைப் பெற்ற உதய் எக்ஸ்பிரசின் தானியங்கு உணவு விநியோக எந்திரம்

கோவை : கோவை - பெங்களூரூ இடையே விடப்பட்ட உதய் எக்ஸ்பிரசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன தானியங்கு உணவு விநியோக எந்திரம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.


கோவை : கோவை - பெங்களூரூ இடையே விடப்பட்ட உதய் எக்ஸ்பிரசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன தானியங்கு உணவு விநியோக எந்திரம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கோவை மற்றும் பெங்களூரூ இடையே அதிநவீன உதய் எக்ஸ்பிரஸ் சேவை கடந்த 8-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் ராஜென் கொஹைன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முழுவதும் குளிர்சாதன வசதியுடன் இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த அதிநவீன ரயிலில், மினி டைனிங் ஹால், தானியங்கு உணவு விநியோக எந்திரம் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கியுள்ளன. 

ஏ.வி.எம்., எனப்படும் இந்த தானியங்கு உணவு விநியோக எந்திரத்தில், டீ, காபி, பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "ஏ.வி.எம்., எந்திரத்தில் பொருட்களின் பட்டியல் காட்சிப்படுத்தப்படும். பயணிகளுக்கு தேவையான பொருட்களின் பெயர் அடங்கிய பொத்தானை அழுத்தினால், அதற்கான கட்டணம் செலுத்தி வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம். இதேபோல, டீ, காபி போன்றவைகளுக்கென தனி எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, உதய் எக்ஸ்பிரசில் பணத்தை செலுத்தி பொருட்களை வாங்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. காலப்போக்கில், பணமில்லா பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்படும்," எனக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...