சோமனூர் பேருந்துநிலைய மேற்கூரை இடிந்த விபத்து : இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி காயமடைந்தவர்கள் மனு

கோவை : சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை : சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கோவையை அடுத்த சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-ம் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000-ம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம், இன்னமும் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.



குறிப்பாக, விபத்தில் காயமடைந்த லதா என்ற கல்லூரி மாணவிக்கு கால் ஒன்று அகற்றப்பட்டதோடு, இதுவரை ரூ. 10 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பேருந்து மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், படுகாயமடைந்து தற்போதும் சிகிச்சை பெற்று வரும் 7 பேர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், 'படுகாயமடைந்தவர்கள் இன்றும் உடல்நிலை தேராமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். எனவே, தங்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதோடு, அரசு வேலையும் வழங்க வேண்டும்,' என வலியுறித்தியுள்ளனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...