கோவையில் மருமகனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி மாமனாருக்கு வலைவீச்சு

கோவை: கோவை மாவட்டம் கணபதி அருகே தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த மருமகனை கத்தியால் குத்திக் கொலை செய்த மாமனாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் கணபதி அருகே தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த மருமகனை கத்தியால் குத்திக் கொலை செய்த மாமனாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் குணவேல். இவர் 3 மாதங்களுக்கு ஒரு முறை, கணபதி காவல்துறையினரின் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இவர் வீட்டிற்கு வரும் போதெல்லாம் மனைவி சாராதாவுடம் தகராறில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாமனார் தியாகராஜன், மருமகன் குணவேலை கழுத்து மற்றும் மார்பு போன்ற பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 



பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதில், தப்பியோடிய  தியாகராஜனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...