பருவமழையை பயன்படுத்தத் தவறுகிறதா வெள்ளலூர் ராஜவாய்க்கால்: புதர்கள், ஆக்கிரமிப்புகள்தான் காரணமா..?

கோவை: கோவையில் கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் புதர்களால் மண்டிக்கிடக்கும் வெள்ளலூர் ராஜவாய்க்காலில் தண்ணீர் பாய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவையில் கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் புதர்களால் மண்டிக்கிடக்கும் வெள்ளலூர் ராஜவாய்க்காலில் தண்ணீர் பாய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கோவை மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நொய்யல் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், நேற்று மாலை வெள்ளலூர் ராஜவாய்க்காலை அடைந்துள்ளது.



பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மேற்கொண்டனர். ஆனால், இந்த சீரமைப்பு பணிகள் வீணாகியதை உணர்த்தும் வகையில், வாய்க்காலில் மீண்டும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.



மேலும், ராஜவாய்க்கால் பகுதிகளில் இன்னும் ஆக்கிரமிப்பில் 200 வீடுகள் உள்ளது.

எனவே, பருவமழையினால் கிடைக்கும் தண்ணீரானது, தடையில்லாமல் பாய வழி செய்யும் வகையில், நொய்யலுடன் பயணிக்கும் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மீண்டும் சீரமைப்பு பணியில் ஈடுபட ஆயத்தமாகியுள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...