ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: 48 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர்: 48 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது பரம்பிக்குளம் - ஆழியாறு (பி.ஏ.பி) திட்டம். இத்திட்டத்தின் மூலம் பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சோலையாறு, உப்பாறு, மேல் நீராறு, கீழ் நீராறு, தூணக்கடவு மற்றும் பெருவாரிப் பள்ளம் ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டன. ஆனால், இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்டும் திட்டம் மட்டும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. ஆட்சியாளர்கள் கடந்த 35 ஆண்டுகளாக இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிவிட்டதால், நேற்று திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் எதிர்காலம் பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில், கட்சி சார்பற்ற விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் காங்கேயம் சீரணி அரங்கில், திருப்பூர் கட்சி சார்பற்ற விவசாய சங்கம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கேயம் வட்டார தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஏர்முனை இளைஞர் அணி மாநில செயல் தலைவர் வெற்றி, கள் ஒருங்கிணைப்பாளர் நல்லாசாமி, மாநில தலைவர் பொன்னுசாமி, துணைத்தலைவர் சண்முகம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், விவசாயிகள் சமூக மீட்பு இயக்கம் கோவிந்தாசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 



”இத்திட்டத்தை நிறைவேற்றாததால், தென்னை விவசாயத்துக்கு முறையாகத் தண்ணீர் கிடைக்காமல், கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வளர்க்கப்பட்ட லட்சக்கணக்கான தென்னை மரங்களில் சுமார் 50% மரங்கள் முற்றிலுமாக காய்ந்துபோய்விட்டன. இனி மீதமுள்ள மரங்களையாவது காப்பாற்றி, இப்பகுதி விவசாயத்தைப் பாதுகாக்கவும், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே 2 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும்," என்கின்றனர் விவசாயிகள்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...