கோவை, நீலகிரியில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை: கோவை மற்றும் நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


கோவை: கோவை மற்றும் நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகள், கோவை மற்றும் நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. கோவையைப் பொறுத்த வரையில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரத்திலும் கனமழை பெய்து வருகிறது.

நேற்று மட்டும், அவலாஞ்சியில் 285 மி.மீ, அப்பர் பவானியில் 206 மி.மீ, எமரால்டு 94 மி.மீ, தேவாலா 67 மி.மீ, கூடலூர் 64 மி.மீ, உதகமண்டலம் 47 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. குந்தா, எமரால்டு, அப்பர் பவனி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

நீலகிரியில் மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஹெல்ப்-லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

0423-2223828, 0423-2223807, என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டும், 8608000100 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணிலும் மழை பாதிப்பு மற்றும் நிலச்சரிவு புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...